திறமைக்கு திருவிழா நடத்து.!

முயற்சிக்கு முன்னால் தயக்கம் வேண்டாம்
முயன்ற பின்னர்
கலக்கம் வேண்டாம்!

விளைவுகள் குறித்து
வேதனை வேண்டாம்!
வென்ற பின்னர்
மயக்கமும் வேண்டாம்

எதார்த்தம் ஏகும்
மனநிலை இருந்தால்
கடல் அலைபோல
முயற்சிகள் தொடரும்!

மனவளம் பெருக
உதவும் சிந்தனைக்கு
உயிரோட்டமாய் இரு!

தினந்தினம்
உனது திறமைகளுக்கு
திருவிழா நடத்து!

எழுதியவர் : (23-Jul-13, 12:15 pm)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 49

மேலே