பெண்

அன்றிலிருந்து இன்றைய நவீன யுக மாற்றத்திற்குப் பின்னும் அநேகமான பெண்களின் வாழ்வு அவர்கள் படித்த,படிக்காத பின்புலத்தைக் கொண்டாலும் பெருமளவில் மாற்றமில்லாத பாரம்பரியத்தையே பிரதிபலிக்கின்றது. இதற்குக் காரணம் அவர்களது சமூகம் சார்ந்ததாகவே இருக்கின்றது. சமூகம் என்பது வீட்டிலிருந்தே தொடங்குகின்றது. ஒரு தந்தை எவ்வாறு தன் தாய்,சகோதரியை நடத்துகிறான் என்பதிலிருந்து மனைவி,மகளை எப்படி நடத்துகின்றான் என்பதிலிருந்தே உறவினர்களாலும் சமூகத்தாலும் அவள் அங்கீகரிக்கப்படுகிறாள்.

அங்கீகாரம் என்பது வெறும் படிப்பு, தொழில் மட்டும் சம்பந்தப்பட்டு இச்சமூகத்தில் கணிக்கப்படுவதில்லை. எங்கே இவர்கள் தவறுகளைத் தாம் சுட்டிக்காட்டினால் தம் மீது அவப்பழி சுமத்தி சமூகத்தின் முன் நிற்க வைத்து விடுவார்களோ எனச் சில பெண்கள் அச்சமுறுவதனாலேயே படிப்பறிவிருந்தும் இவ் அத்துமீறிய சமூக திணிப்பை மீறமுடியாதவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு படிப்பறிவு இருந்தும் தொழில் நிலை வர்க்க வேறுபாடு இருப்பதனால் இவற்றை சுட்டிக்காட்ட முடிவதில்லை.
சிலர் தம் குடும்பத்தின் மீதுள்ள நிபந்தனையற்ற அன்பினால் எத்தகைய புறக்கணிப்பையும் சகித்துக் கொண்டு விடுகிறார்கள்.

எது எப்படியோ தாமாக மாறாத வரையில் பெண்கள் தம் நிலையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்பது நிதர்சனம்.

எழுதியவர் : நர்த்தனி (1-Oct-24, 8:06 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : pen
பார்வை : 6

சிறந்த கட்டுரைகள்

மேலே