செய்யும் ஒருகருமம் தேர்ந்து புரி - நீதி வெண்பா 16

நேரிசை வெண்பா

செய்யும் ஒருகருமம் தேர்ந்து புரிவதன்றிச்
செய்யின் மனத்தாபம் சேருமே - செய்யவொரு
நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப்
பொற்கொடியைச் சேர்துயரம் போல்! 16

- நீதி வெண்பா

பொருளுரை:

செய்ய வேண்டிய ஒரு செயலை அதனைச் செய்வதற்குரிய உபாயத்தை முன்னே யோசித்துச் செய்வதல்லாமல்,

யோசியாமல் செய்தால், முன்னாளில் சிறப்பாக ஒரு நல்ல குடும்பத்தைக் காத்துக் கொண்டிருந்த கீரிப் பிள்ளையைக் கொன்ற அழகிய பிராமணப் பெண்ணைச் சேர்ந்த துன்பத்தைப் போல மனத்துயரம் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-25, 1:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே