சாகவில்லை வாலி. ​.....

கவிதை
எனும்
ஆழியிலிருந்து உதித்த
காலைக்கதிரவன்
வாலி

இயல் இசை நாடகம் என்ற
முக்கடலில் மூழ்கி
முத்தெடுத்தவர்

தன் பேனாவால்
தமிழை தத்தெடுத்தவர்

"மை "
எனும் ஓரெழுத்திட்ட

"பேனா "
எனும் ஈரெழுத்து படைத்த

"கவிதை"
எனும் மூன்றெழுத்தை
முதுகில் தாங்கிய

"காகிதம் "
எனும் நான்கெழுத்தானது

"சரித்திரம் "
எனும் ஐந்தெழுத்தைப்
படைக்க

"கவிஞர் வாலி"
எனும் ஆறெழுத்தே
காரணம்

இவர்
கவிஞர்களுக்கெல்லாம்
நல்ல முன் உதாரணம்

இவர் கவிதைகளில் மட்டும்

வஞ்சப்புகழ்ச்சியும் இருக்காது
கஞ்சப்புகழ்ச்சியும் இருக்காது
லஞ்சப்புகழ்ச்சியும் இருக்காது

எல்லாருமே "சமம்" என
எண்ணும் இன்னொரு
எழுதுகோல் இவர்

செய்தி கேட்டேன்
இவர் இன்று இயற்கை
எய்திவிட்டதாய்

சென்று கேட்டேன்
இறைவனிடம் ஏன் என்று

பிறகுதான் தெரிந்தது
இன்னொரு இயேசு காவியம்
படைக்க அவர் இயேசுவிடம்
சென்றிருப்பதாக....

இறைவனே ஆனாலும்
வாலியெனும் வரலாற்றை
அவ்வளவு
எளிதில் நம்மிடமிருந்து
கைப்பற்றி விட முடியாது.....

எழுத்து
ஜெகன்.G

ஓவியம்
சுரேஷ்
​.​

எழுதியவர் : ஜெகன் .ஜீ (24-Jul-13, 6:41 pm)
சேர்த்தது : ஜெகன் G
பார்வை : 117

மேலே