பத்துமாசம் சுமந்தவளே

பத்திரமா என்னை
பத்துமாசம் சுமந்தவளே
பாலூட்டி எந்தன்
பசியை தீர்த்தவளே
என்ன நீ சுமைக்கையிலே
நீ என்னவெல்லாம் கனவு கண்டிருப்ப
நித்திரையில் என் கண்மூடும்வரைக்கும்
உன் வழிகளை நீயும் மூடாம வைச்சிருப்ப
நானும் ஆளாகி
உன்னை பூசிக்க நினைக்கையில
பெயர்தெரியா நோயும் வந்து
உன் உசுர பறிச்சிடிச்சே
மண்ணுக்குள்ள புதைத்த உன்னை
நானும் மறுபடியும் காண நினைக்கையில
ஒரு புகைப்படம் கூட
உன்னை நான் எடுத்து வைக்கயில்லயே
உன் நினைவு மட்டும் தொடர்கையில
உன் உருவம் ஏனோ மறைந்துபோகுதே
தெருவோரம் போனதையெல்லாம்
தத்ரூபமா என் கமரா படம் பிடிக்கையில
பத்திரமா என்னை பார்த்த உன்னை
பாவி நான் ஏன்தான்
படம் பிடிக்காம போனேனோ ....
எத்தனையோ சினிமா ஸ்டார
என் கைப்பை சுமந்திருக்கு
என் நெஞ்சில் கூட
என் காதலி பெயரு பச்சகுத்திருக்கு
பத்துமாசம் சுமந்த உன்னை
என் கைப்பையும் ஏனோ சுமக்க மறந்திருச்சி
பத்திரமா பார்த்த உன்னை
என் நெஞ்சுக்கும் ஏனோ சுமக்க கசத்திருச்சி
எப்படியும் அம்மா
உன்ன நானும் மறக்கல்ல
என் மடத்தனத்தை
நானும் மறுக்கல்ல