ஹாஸ்டலில் அன்னை

ஆறு வயதின் அரை நாண் கயிறு
பருவமடைந்துபோது வந்த பாதி சவரன்
கணவனின் உருவான தாலித் தங்கம்
மிளகு சீரக டப்பாவின் வாழ்ந்த சில்லரை
விதை நெல்லாயிருந்த
வங்கியிருப்பு காலியானபோதுகூடக்
கலங்காதவள் கண் கலங்கினாள்
மகனை ஹாஸ்டல் வாசலில் விட்டபோது
அன்னை !!