நீதான் என் நம்பிக்ககை!

சீராளா சின்ன வனே!
பேர் விளங்க வந்த வனே!
தரணி நாளை உன் கையில்!
தரணி தரா வாழ்த்துகிறேன்.

கேள்விக்குப் பெரியோர் வேணும்.
கேட் பதிலுங் கவனம் வேணும்,
நாளையை வெல்ல வேணும்
நாடு உன்னை வணங்க வேணும்.

சேவல் கூவக் கேட்க வேணும்,
சிறு பொழுது படிக்க வேணும்,
காலை தினம் குளிக்க வேணும்,
கதிரோன் உதயம் காண வேணும்.

வேளை மூன்றே உண்ண வேணும்,
வீட்டில் சொல் அடங்க வேணும்,
மாலை கொஞ்சம் ஆட வேணும்,
மற்ற வரை மதிக்க வேணும்.

வலிமைமிகு உடல் வேணும்,
இளமைத்தகு திடம் வேணும்,
வளமை உயர் எண்ணம் வேணும்..
எளிமை நேர் செயல் வேணும்.

சிறுமை தீர் பழக்கம் வேணும்,
பெருமை சேர் வழக்கம் வேணும்.
உரிமை கோர் முழக்கம் வேணும்.
அருமை ஊர் அழைப்பு வேணும்.

பொது நலன் பேண வேணும்,
பொதுச் சொத்துக் காக்க வேணும்,
உண்மையாய் உழைக்க வேணும்,
ஊழலை ஒழிக்க வேணும்.

நல்லோரைச் சேர வேணும்,
நல்ல நூல் வாசம் வேணும்,
இல்லாரை ஏற்ற வேணும்,
இல்லாமை ஓட்ட வேணும்.

அர்சியலைத் துலக்க வேணும்,
ஆட்சி சுத்தம் செய்ய வேணும்,
நதிகளெல்லாம் இணைய வேணும்,
நாடு வளம் செழிக்க வேணும்.

பேதங்களைக் களைய வேணும்,
வாதங்களுஞ் செய்ய வேணும்,
நீதி நின்று வாழ வேணும்,
சாதியற்ற சமூகம் வேணும்.

பெண்கள் ஐயம் நீங்க வேணும்,
பேயர்களைத் திருத்த வேணும்,
கத வில்லா ஊர்கள் வேணும்,
கண்ணுறங்க அமைதி வேணும்.

விளைபொருட்கள் பெருக வேணும்,
விலை நிர்ணயம் ஆக வேணும்,
உழவுத் தொழில் பிழைக்க வேணும்,
ஒறுத்தும் பிணி போக்க வேணும்.

சொந்த வீடு ஒன்று வேணும்,
எந்தநாளும் வெளிச்சம் வேணும்,
காடு வளம் விரிய வேணும்,
கால மழை பொழிய வேணும்.

காதல் மீண்டும் மலர வேணும்,
கட்டாயங்கள் மறைய வேணும்,
சந்தைப் பேரம் தொலைய வேணும்,
சடங்குகளும் ஒழிய வேணும்.

விஞ்ஞானங்கள் கற்க வேணும்,
விதி புதுமை செய்ய வேணும்,
மெஞ்ஞானமும் வளர வேணும்,
மதி நிறைத்து ஆள வேணும்.

பூரண மது விலக்கு வேணும்,
பூவுலகை காண வேணும்,
காந்தி ராஜ்யம் ஆக வேணும்.
காமராசர் மனிதம் வேணும்.

நீயே தான் என் நம்பிக்கையே!
நீயே தான் என் எதிர் காலமே!
நீயே தான் என் ஒளி விளக்கே!
நீயே தான் என் விடியலே!


கொ.பெ.பி.அய்யா

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (25-Jul-13, 12:34 pm)
பார்வை : 275

மேலே