அங்கத்தின் உறுதி இறுதியில் புரியும்

கையிலே கலை வண்ணம் கண்டான்
உள்ளங் கையால் உருவம் வரைந்தான் !
காட்டு மன்னன் கல்லிலே வந்தான்
நாட்டு மனிதன் விரலிலே பிறந்தான் !

கல்லும் கதை சொல்லும் என்பர்
சொல்லும் அதன் பெருமைதனை !
இருகைகள் இணைந்திட்டு வரையுது
இம்மியளவும் பிசிறால் தீட்டுகிறது!

ஈழத்து தமிழனின் ஈடில்லா சின்னம்
இறுதிவரை போராடிய சிங்கம் !
சிங்கத்தின் வீரத்தை அகிலம் அறியும்
அங்கத்தின் உறுதி இறுதியில் புரியும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Jul-13, 10:05 pm)
பார்வை : 54

மேலே