..............கவிதைக்கடை...........

தினமும் திறக்கிறேன்,
என் கவிதைக்கடையை !
உன் விழிகளுக்கு விருந்தாக்கி,
வியாபாரம் செய்ய !
விலைக்கு வாங்காவிட்டால் போகிறது !
எடுத்துப்படித்துவிட்டுப்போ !
அல்லது,
விரல்தொட்டுப்பார்த்துவிட்டாவதுபோ !
இல்லையேல் !!
கடை அடைக்கும்முன் அடைக்கும் என் நெஞ்சமும் !
வா வாடிக்கையாளினியே !!
பழகு வரிகளுடன் !
பிறகு !
அதன் பிரதியாம் என் விழிகளுடன் !!

எழுதியவர் : (27-Jul-13, 7:37 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 64

மேலே