எல்லாம் கனவில்

விதையைத் தூவினேன்
விளைச்சலில்லை
மலரைப் பறித்தேன்
மணம் இல்லை
வானைப் பார்த்தேன்
வெளிச்சம் இல்லை
கதவைத் திறந்தேன்
காற்று இல்லை
கடலைப் பார்த்தேன்
அலைகள் இல்லை
கண்ணைத் திறந்தேன்
காட்சிகள் இல்லை
காதைத் தீட்டினேன்
ஒளிகள் இல்லை
கால்களை நீட்டினேன்
நடக்கவில்லை
கைகளை மடக்கினேன்
அசைவுகள் இல்லை
நெருப்பில் குதித்தேன்
சூடுத் தெரியவில்லை
உணர்வை அசைத்தேன்
உணர்வுகள் இல்லை
எல்லாம் நடந்தது
எனக்குத் தெரியவில்லை
ஏனென்றுக் கேட்டால்
இறந்துக் கிடந்தேன்
நிலத்தின் மீது
மலரைத் தூவினார்கள்
மணத்தை நுகர முடியவில்லை
வானை நோக்கி மாண்டதால்
வெளிச்சம் எனக்குத் தெரியவில்லை
உடல் எனும் கதவைத் திறந்தேன்
உயிர் எனும் காற்று வீசவில்லை
கடலைப் போல் விரிந்திருந்தேன்
அசைவுகள் எனும் அலைகள் வீசவில்லை
கண்ணைத் திறந்தே இருந்தேன்
காட்சிகள் ஏதும் தெரியவில்லை
காதைத் தீட்டி வைத்தேன் - அழும்
குரல்கள் கேட்கவில்லை
கால்களை நீட்டினேன் - இருக்
கட்டை விரல்களை கட்டிவிட்டார்கள்
கைகளை மடக்கி வைத்தேன் - இருக்
கை கட்ட விரல்களைக் கட்டிவிட்டார்கள்
நெருப்பில் வைத்தார்கள் - என்
நெடு உடல் காணவில்லை - இவை
எல்லாம் நடந்தது கனவில்
விழித்துப் பார்த்தேன் - ஒரு கப் காபியில்
வந்து நின்றாள் என் மனைவி

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன் (27-Jul-13, 7:44 pm)
சேர்த்தது : s.sankusubramanian
Tanglish : ellam kanavil
பார்வை : 75

மேலே