என் சகியே ....

முன் சகியே முழு சகியே
முத்தாய் மண்ணில் பிறந்தாயே,
உனை தொழவே உயிர்த்திருந்தேன்
உற்ற பயனால் உடன்பிறந்தேன்...

வான் சிந்தும் அலை அது
தெறிக்கும் முத்தில் சிந்தானாய்,
புவி வெட்கி சிரம் தாழ்த்த
இரு விழி கவியென நீயானாய் ......

கலையே உந்தன் விழி காண
கதிரும் காலை கவி பாடும் ,
அழியா ராகம் ஒன்றிசைத்து
அசையும் அன்றில் உனை தேடும் ...

மலர துடிக்கும் மண மொட்டும்
என் சகியின் கூந்தல் படியேறும் ,
தென்றல் காற்றும் இன்றோடு
உன்குழலில் ஏற தவமிருக்கும் ...

மூச்சு காற்றில் மோட்சம் செய்தாய்
நான் மரியாதிருக்க மாற்றம் கொய்தாய்,
நித்திரை கலைக்க நீர்த்துளி தெளிப்பாய்
கனிமொழி கவியாய் எழுவாய் என்பாய்...

தாய்மைதனை விழியில் ஏந்தி அது
வழியாதிருக்க என்னுள் கோர்த்தாய்,
தமையன் விழியில் அருவி கண்டால்
விழிவழி தன்னில் உயிர்வலி துடைப்பாய் ...


உன் ஒற்றை களிப்பில் உலகம் மறந்தேன்
அம்மாற்றம் மாற மாட்டேன் என்றேன் ....


இறையும் புவியில் உருவாக
யுகங்கள் ஏழும் காத்திருப்பான்,
அமுதே உன்னுள் கருவானால்
அலையும் தோற்க ஆர்பரிப்பான் .......






$வினோ.........

எழுதியவர் : வினோ..... (27-Jul-13, 8:12 pm)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : en sakiye
பார்வை : 52

மேலே