வாலி நீ வாழி.........!!

காப்பியம் முதல் கணினிவரை
காலத்தையும் வரிகளுக்குள் நிறைத்தவன்
எதுகையையும் மோனையையும்
தன் இதழ்களின் இடையே மறைத்தவன்

காலம் தாண்டியும் வாழ்ந்திருக்க வேண்டிய
காவியக் கவிஞன் அவனோ காலனின் கையில்
அவன் கைபிடித்த என் பேனா முனையோ
கையறு நிலையில்......!!

கண்ணனே நீ காக்க வாராயோ..?
காதலுக்கும் வேலனுக்கும் சொத்தவன்
யார் சிரித்தாலும் யார் அழுதாலும்
தத்துவத்திலும் தலைச்சிறந்த வித்தகன்

தாளத்தில் தவழ்ந்து கானத்தில் தழைத்த
தாய்த்தமிழே நீர் வார்த்த முல்லை
அவன் வரிகளை விரல்பிடித்து நடந்த
என் கவிகளுக்கினி கைப்பிடி இல்லை.....!!!

வரிகளிலே வைரத்தை வைத்தாய் வாலி
நீ வாழாமல் என் உயிர் நீர்த்து போனாயே..!!
இறந்தாலும் எங்கள் நினைவோடு இணைந்த
நின் பாடல் வரிகள் வாழி...! வாழி.. வாழி...!
நீ இறந்தாலும் நீங்காத உன் நினைவுகள்
வாழி... வாழி.... வாழி.......

எழுதியவர் : பாத்திமா ரேஷு (27-Jul-13, 6:27 pm)
சேர்த்தது : Fathima Reshu
பார்வை : 67

மேலே