போஸ்ட் ஆபிஸ் டைம்

வந்தவர்: அஞ்சு ரூபா ஸ்டாம்ப் இருக்கா?
அலுவலர்: இருக்கு
வந்தவர்: ஒரு ஸ்டாம்ப் கொடுங்க
அலுவலர்: இந்தாங்க நாலு ஸ்டாம்ப்
வந்தவர்: எனக்கு அஞ்சு ரூபா ஸ்டாம்ப் ஒண்ணே ஒண்ணு போதும்
அலுவலர்: மத்த மூணு ஸ்டாம்பையும் ஸ்டாம்ப் இல்லாதவங்களுக்கு கொடுத்து உதவுங்க.
வந்தவர்: ???
***
வந்தவர்: இதை ரெஜிஸ்டர்ட் தபால்ல அனுப்பணும்.
அலுவலர்: அனுப்புங்க, அது உங்களுடைய விருப்பம்
வந்தவர்: அது இல்லீங்க, இதுக்கு எவ்வளவு பணம் கட்டணும்?
அலுவலர்: இந்த தபால்ல வச்சு நீங்க கட்டடம் எதுவும் கட்டவில்லையே. அப்புறம் எதுக்கு கட்டணும்?
வந்தவர்: தவறாக சொல்லிட்டேன். இதை ரெஜிஸ்டர் போஸ்டுல அனுப்ப எவ்வளவு கட்டணம்?
அலுவலர்: பில்லு போடுற கட்டணம் அறுபது ரூபாய். அதுக்கு மேல நீங்க விருப்பப்பட்டதை கொடுங்க.
வந்தவர்: இந்தாங்க அறுபது ரூபாய். இதுக்கு மேல இந்தாங்க உங்களுக்கு கை கொடுக்கிறேன். நன்றி
அலுவலர்: ???
***
வந்தவர்: என்னுடைய பாட்டியோட கொள்ளுப்பாட்டி நேத்து புட்டுக்கினாங்க. அவங்களை குளிப்பாட்ட ஆயிரம் ரூபாயை எப்படி அனுப்புவது?
அலுவலர்: அவங்க குளிக்க எதுக்குங்க பணம்? இருப்பது பக்கெட் தண்ணியை கொரியர்ல அனுப்பினீங்கன்னா, பாட்டி குளிக்க உபயோகமா இருக்கும்.
வந்தவர்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Jun-24, 4:26 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : post abis time
பார்வை : 20

சிறந்த நகைச்சுவைகள்

மேலே