சாரு பாரு

பேரைப்பார்த்தாலே தெரிகிறதே, இந்த இருவரும் உயிர்தோழிகள் என்று. இவர்கள் இருவரும் எவ்வளவு நெருக்கம் என்றால், பேருந்தில், ட்ரெயினில், டாக்ஸியில் சென்றால் பக்கத்து பக்கத்தில் ஒருவரை ஒருவர் நெருக்கி கொண்டு, உட்கார்ந்துகொண்டு கொண்டுதான் செல்வார்கள். ரயிலில் ஸ்லீப்பர்ல சென்றால், ஒரே பர்த்தில் இருவரும் படுத்துக்கொள்வார்கள். (அப்ப, இன்னொரு பார்த் காலியாக இருக்குமே, இதுபோன்ற அச்சிப்பிச்சி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது). அப்படிப்பட்ட நெருக்கம்.
சாருக்கு பிடித்த ஜூஸ் கரும்பு சாறு. பாருவிடத்தில் ' உனக்கு பிடித்த சாறு எது என்று கேட்டால், ' சாருக்கு பிடித்ததுதான் எனக்கும் பிடிக்கும், நீ போய் உன் வேலையே பாரு" என்பாள்.
ஆனால், ஒரு வித்தியாசம், சாருக்கு கரும்பு சாறு ஐஸ் போட்டுத்தான் பிடிக்கும். பாருக்கு ப்ளெய்ன் கரும்பு சாறு தான் பிடிக்கும். "ஏன், ஐஸ் போட்டு குடித்தால் நல்லாதானே இருக்கும்" என்று பாருவை கேட்டால்" எனக்கு ஐஸ் போட்டு குடிக்க பிடிக்கும். ஆனா, உடனே ஜலதோஷம் பிடிக்கும். இப்படி ஜலதோஷம் பிடிப்பது எனக்கு பிடிக்காது" என்று வருத்தத்துடன் சொல்வாள். இதை பற்றி சாருவிடம் கேட்டால் "ஐஸ் போட்டு குடிச்சா எனக்கு ஜலதோஷம் பிடிக்காது. அதனால, ஜலதோஷத்திற்கு என்னை பிடிக்காது. ஆனால், ஜலதோஷத்திற்கு பாருவை பிடிக்கும். அதனால்தான் பாருக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கிறது"
சரி, இந்த நெருக்கமான தோழிகள் யார் என்று கேட்கிறீர்களா? (அட, சும்மா கேளுங்க, காசா பணமா?)
பாரு LKG, சாரு UKG.... LKG UKG அவங்க இனிஷியல் மட்டும் இல்லை. அவங்க படிக்கிறதும் இந்த கிளாஸ் தான், ஒரே கின்டர் கார்டன் பள்ளியில்.
ஒரு விஷயம் தெரியுமா? இவங்க அம்மா இரண்டுபேரும் கூட மிக நெருக்கமான தோழிகள்...சரி.
இத்தோட இந்த கதையை முடிச்சிக்கிறேன். நான் இவங்களை பத்தி இன்னும் சொன்னா, அது உங்களுடைய தலைவலியில்தான் முடியும்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (29-Jun-24, 3:41 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : saru paaru
பார்வை : 47

மேலே