வாழ்த்து
11 ஆகியும் ஆடி காத்துல
தூக்கம் வரல..
ஆத்தா சூடம் சுத்துனா
காத்து கருபோனு ..
அப்பா முணுமுணுத்தாறு
சம்பள நாளுக்கு ஒரு வாரம் பாக்கின்னு..
ஆத்துக்காரி படபடத்தா
புது வீடு பால் காய்ச்சனும்னு..
பெத்த புள்ள பாட்டு கிளாஸ்
பீஸ் னு தொன தொனத்த...
செல்போன சினிங்கிடே நா பாக்க
12 க்கு போன் வந்தது ..
மனசு சொன்னபடி ...
ஆறு கிளாஸ் உள்ள தள்ளியும்
அயராம முப்பதாம் பொறந்தநாள்
வாழ்த்து சொன்னான் நண்பன்
அவன் மனைவிட்ட திட்டு வாங்கியபடியே ...