யாரிந்த .-'ழகர' காரன்..?.

தமிழின் அழகு
ழகரம்
இவனால் ழகரம்
பெற்றது பேரழகு

முகத்தால் இவன் பேசியது
இமயத்தின் எட்டு மடங்கு
நாவினால் ,
நானூறு கடலளவு

தமிழ் வார்த்தைகளுக்கு
புதிய விலாசம்
விசாலமாய் அளித்த
புதிய தொல்காப்பியன்

தமிழ் சொற்களுக்கு
கண்களின் மூலமும்
கன்னகதுப்புகள் வழியாகவும்
புதிய உச்சரிப்புக்களை
கற்றுக் கொடுத்த நக்கீரன்

காந்தியண்ணல் எனும்
கவிதையின் வரிகள்
காமராஜ்
காமராஜ் எனும்
ஓவியத்தின் வண்ணம் இவன்

இவனே
பாவங்களின் நூலகம்
நடிப்பின் அகராதி
தமிழ்த்திரையின் புதிய திசை
முத்தமிழின் மூச்சு
உச்சரிப்பின் உயர்வீச்சு

கடலாக முழங்கிய
இவனது தமிழில்
சிலிர்த்து எழும்பின
கல்லறை சடலங்கள்

இவனால் நடிப்பு
புதிய இலக்கணத்தை
பெற்றது.
சரித்திர சடலங்கள்
இவனது ஒப்பனையில்
தரிசனமாகின;
இவனது முக நாக்கால்
உயிரோவியமாகின

இவனே .....


சிவாஜிகணேசன்....எமது நேசன்...
நடிப்பின் ஈசன்....!!!!!

எழுதியவர் : அகன் (28-Jul-13, 11:59 am)
பார்வை : 75

மேலே