உன் நினைவுகள்...!

ரம்யமான பொழுதுகள்
எல்லாம் உன் நினைவுகளையும்
உன் நினைவுகள் எல்லாம்
ரம்யமான பொழுதுகளையும்
மாறி மாறி என்னுள் பரப்ப
ஒரு மழையில் நனையும்
செடியாய் பூக்கள் பூக்கிறது மனது!


* * * * *

நீ இல்லாவிட்டாலும் பரவாயில்லை
ஒரு மழை பெய்யும்,, நல்ல வெயிலடிக்கும்
ஒற்றை குயில் கீதமிசைக்கும்....
எப்போதும் வயல்வெளியில் பசுமைகள்
எனக்காய் காத்திருக்கும்.....
வெட்டவெளி இடைவெளிகளில் அசைவற்ற
தூரங்கள் அருகாமையாய் இருக்கும்....
தேய்ந்தாலும் மீண்டும் நிலவு வரும்....
என்னுள் சுகமான சோகமிருக்கும்...
கட்டுக்கள் அறுத்து கவிதை சீறிப்பாயும்..
நீ இல்லா விட்டால் என்ன.......
உன் நினைவுகள் போதுமெனக்கு.....!

எழுதியவர் : Dheva.S (28-Jul-13, 10:15 pm)
பார்வை : 205

மேலே