ஹையா......தலை வலிக்கு பை பை மா மா மா

நிலவுக்குள் நெருப்போ
நீள விழிக் கோபம்.....? - காதல்

நெஞ்சமே சினமுராதே
நெருங்கியே நானிருப்பேன்....

சிந்தைகள் கலந்த பின்னே
சிறை என்பது தனிமை அல்ல

உடல் மேல் காதல் அல்ல அது
உள்ளத்தில் வாழுதடி.....இதை

உணர்ந்த பின்னும் கோபமா
ஊருக்கு போய் நான் வருகிறேனம்மா

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (28-Jul-13, 10:21 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 97

மேலே