என் குழந்தை

கதைகளில் சிறு கதைகள்
இருப்பது போல்
கவிதைகளில் இது
குறுங்கவிதை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
-------------------------------
என் குழந்தை
-------------------------------
இதுவரை நான்
உணராத கவிதை
என் வாழ்நாளின்
சிறந்த கவிதை
வலியோடு
பிறந்த கவிதை
என் உயிரோடு
கலந்த கவிதை
என் அன்பிலே
வளர்ந்த கவிதை
என் உணர்விலே
நிறைந்த கவிதை
நான் தளர்ந்த போது
என்னை தாங்கிய கவிதை
இப்போது அவனுகென்று
ஒரு கவிதை
அந்த கவிதை
என் கவிதையின் கவிதை