மீண்டும் வாராதா....!
கொட்டும் மழை ஓயாமல்
வீசிடும் தென்றல் சில்லென்றும்
வயலில் கேட்கும் நாற்றுப் பாடல்
சாலையில் செல்லும் ஜல் ஜல்
சலங்கை சத்தத்துடன் ஓசையும்
மாட்டு வண்டிகள் அசைவுகளும்
தலையாட்டிடும் லாவகமும்
அதனை அதட்டி சாட்டை அடி கொடுக்கும்
வண்டிக்காரரின் கூக்குரலும்
கூட்டம் கூட்டமாக செல்லும்
மந்தை ஆடுகளின் மே சத்தமும்
குழந்தை அழுதிடும் அழுகுரல்
எங்கோ ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி
கிரீச்சிடும் கிளிகளும் குருவிகளும்
அணில்களும் காக்கை இனங்களும்
எங்கும் காணினும் ஒலித்துக் கொண்டே
இருக்கின்றதே இன்றும் என் செவிகளில்
இனி எங்கு காண்பேனோ ....!
எங்கு காணினும் யுத்தங்களாய்
எங்கு காணினும் பஞ்சம் பட்டினி ஓலங்களாய்
எங்கும் ஓலங்கள் வேகங்கள் மின்னல்கள்
ஓட்டம் ஓட்டமாய் விரைந்து செல்லும்
பேருந்துகளும் சொகுசு வாகனங்களும்
யாரைத் தேடி செல்கிறதோ
எதனை பிடிக்க எதனை சாதித்து
வாழ்க்கையின் ஓட்டங்களோ !இன்றும்
ஓசையில்லாமல் போய் கொண்டேதான்
வாழ்க்கையின் ஓடம் எந்தக் கரை சேரவோ....!
புரியாத மவுனங்கள் கேள்விகள் எனக்குள்ளே ஒலித்துக் கொண்டே இருகின்றது பழைய நினைவுகளாய் மீண்டும் திரும்பிடுமா?
வாராமல் போகுமா? மறைந்திடுமா?
இளமை காலங்களே! இளமை மேகங்களே!
கொஞ்சம் சொல்லுங்களேன் ....!