விசுவாசம்
உன்
பெயருக்குப் பின்னுள்ள எழுத்து
நீ பெற்றபட்டம்
உன் பெயருக்கு
முன்னெழுத்தாய் உள்ள
பெற்றோருக்கோ..
நீதான் பட்டம்,
நீபெற்ற பட்டம்
உன் வருமானத்திற்கு வழிகாட்டலாம்
பெற்றோரின் பட்டமாகிய நீ
ஒருபோதும் அவர்களை
முதியோர் இல்லத்திற்கு
வழிகாட்டிவிடாதே..!!!