அடி காட்டு ரோசாவே

அடி காட்டு ரோசாவே
உன் கை பிடிக்க தடை ஏதோ ?
மாமன் நான் தவிக்கிறேன் ..
உன் சாரல் வீசும் பார்வையில்
என் வயதை கில்லி விடாதே..
உன் இடுப்பு மடிப்பில்
என் ஆண் கர்வத்தை அடக்கி விடாதே..
உன்னை ஆழ வேண்டி
உன்னை பின் தொடரும் பித்தனாக
என்னை மாற்றிவிடாதே..
சிந்தையும் மயங்குதடி
என் சிந்தனைகளை அலைய விடாதே..
வார்த்தை ஒன்றை சொல்லி விடு
மாமன் நான் வாரேன்
மஞ்சள் கயிறோடு..
என் ஆசை ரோசா உன்னை
ஆசையோடு தூக்கி செல்ல..

எழுதியவர் : ஜுபைடா (29-Jul-13, 8:27 am)
சேர்த்தது : காயத்ரி
பார்வை : 109

மேலே