நான் ஒரு காதல் பச்சோந்தி
உன் கூந்தல்
பச்சோந்தி
உனக்கு தெரியுமா !
நீ வெட்கத்தில்
கன்னம் சிவக்கும் போது
உன் பூ
சிவப்பு ரோஜா
நீ மஞ்சள்
தேய்த்து குளிக்கும் போது
உன் பூ
கனகம்பரை
நீ பால்
சிரிப்பு சிரிக்கும் போது
உன் பூ
குண்டு மல்லி
நீ மூக்கு
சிவக்க கோவப்படும் போது
உன் பூ
செம்பருத்தி
பெண்ணே
உன் கூந்தல்
ஏறியது
நான் தான் ..
நீ எப்படியோ
நானும் அப்படியே !
நான் ஒரு
காதல் பச்சோந்தி

