பெண் ஒன்று வேண்டும்

காலை செங்கதிர் வீசுமுன்
கையில் ஒரு கப் தேநீரோடும்
முகத்தில் சிறு புன்னகையோடும்
அவள் பூவிதழால்.....
என் நெற்றியை ஒரு முத்தத்தால் தூண்டி
என்னை தூக்கத்திலிருந்து
விழித்தெழ செய்யும்
பெண் ஒன்று வேண்டும் .....

தினம் ஒரு ஊடல்
வாரம் ஒரு சீண்டல்
சில பொய்கள் ,
என்றும் சிரிக்கும் இதழ்கள்
தீண்டும் போது மெல்லிய சிணுங்கல் என
மொத்தம் சேர்ந்த
பெண் ஒன்று வேண்டும் .....

அவள் சமையலால்
என்னை மயக்கிடும்
நான் மயங்கிடும் வேளை என்னை
அவள் தோள் சாய்த்திடும்
அவளின் உடலாய் என்னையும்
எனது உயிராய் அவளையும் நினைத்திடும்
பெண் ஒன்று வேண்டும் .....

தினம் குளியலில்
என் சோப்பாய் அவளும்
தினம் அவளின் கூந்தலில்
சூடும் பூவாய் நானும்
என்றென்றும் இணைந்திருக்க
பெண் ஒன்று வேண்டும் .....

என் மௌனத்தை தினம்
நீப்பவளாய்
என் சோகத்தை அவள்
சுவைப்பவளாய்
என் மரணத்தில் மடிதருபவளாய்
பெண் ஒன்று வேண்டும் .....

இப்படிப்பட்ட பெண்
எனக்கு கிடைப்பாளா
நீங்களே சொல்லுங்க .....?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (29-Jul-13, 11:12 pm)
Tanglish : pen ondru vENtum
பார்வை : 281

சிறந்த கவிதைகள்

மேலே