கண்ணீருக்கு மரியாதை!

கண்ணீருக்கு மரியாதை.....!!!
“அம்மா சீக்கிரம் தலை வாரிவிடும்மா......எப்பவும் லேட்டு தானான்னு மாமி திட்டுவாங்கோம்மா”! என்று அவசர கோலம் போட்ட கோலத்தில் தலையும் சீவி அம்மாவிடம் பாய் சொல்லிவிட்டு ஓட்டம் தொடங்கினாள் ஜெயா!
மூன்று வருடமாக சேது மாமி வீட்டில் வேலை செய்யும் ஜெயா...வேலைகளை வேகமாக சுத்தமாக செய்வதில் கெட்டிக்காரி! வெள்ளிக்கிழமை குளித்துதான் வரவேண்டும் என்று சேது மாமியின் கட்டளை வேறு!!! அதற்காகவே ஜெயா குளித்துவிட்டு சேது மாமி வீடு சென்று அடைய கொஞ்சம் தாமதமானது!
“ஜெயா.... காமாட்சி விளக்க பேஷ புளிபோட்டு சுத்தமா கழுவுனம்....இன்னிக்கு வெள்ளிகிழமை இல்லையோ ...நோக்கு தெரியாதோ...”அப்படி என்று சிமிட்டி கொண்டு அடுத்தாத்து செல்லம்மாவ பார்க்க விடுக்கென்று பறந்தாள் சேது மாமி!
“ஏன்டி...செல்லு...நேக்கு ஒரு ஐடியாடி......செத்த வாரிய இங்கேன்னு”.....பட பட படைப்புடன் அழைத்தாள்....செல்லமாவோ....”ஏன்டி....நேத்துதானே சீனி வாங்கினே இன்னிக்கும் வேணும??? என்றாள் ஆதங்கத்துடன்! “அதுக்கும் ஐடியாவிற்கும் என்னடி சம்மந்தம்???” என்று மூச்சு இறைக்க உட்கார்ந்தாள் சேது!
செல்லம்மாவும் ஆவலுடன் என்னடி ஐடியா அது? என்று வாழைக்காய் நறுக்கி கொண்டே கேட்டாள்....! நோக்கு தெரியாதா.....செல்வராசு கடை.... ...அங்கே லாட்டரி விக்கிறாண்டி ....ஒன்னு வாங்குவோம்....ஏதாவுது பரிசு விழுந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு போகலாம்டி....புண்ணியம் கிடைக்கும்...என்று மூச்சு விடாமல் பேசி நிறுத்தினாள் சேது மாமி!....
கொஞ்சநேரம சிந்தித்த செல்லம்மாவிற்கு அது நல்ல ஐடியாவாகவே தோன்றியது.
அவளும் வரிந்து வாரிக்கொண்டு செல்வராசு கடைக்கு போக ஆயத்தமானாள்!

டிக்கெட் விலையை இருவரும் பங்கிட்டு கொள்ளலாம் என்கிற டீளுடன் செல்லமாவே டிக்கெட் வாங்க புறபட்டு போனாள்.
ஆளுக்கு ஐம்பது ரூபா பங்குபோட்டு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி வந்து சேது மாமியிடம் கொடுத்தாள் செல்லம்மா! அதை பய பக்தியுடன் சேது மாமி, சாமி படத்தின் அடியில் நம்பிக்கையுடன் வைத்து விட்டு போனாள்! நம்பரை மட்டும் டைரியில் எழுதி மற்றொரு தாளில் எழுதி செல்லம்மவிடமும் கொடுத்தாள்!
இதையெல்லாம் தலை சீவிகொண்டே பார்த்து கொண்டு இருந்தான் ரமேஷ்!! சேது மாமியின் ஒரே மகன்....படிப்பு சரியாக வராததால் பிரிண்டிங் பிரஸ் கம்பெனியில் பைன்டராக வேலை பார்க்கிறான்! வயது 21 என்பதால் அவனுக்கு சினிமா மோகம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது! கிடைக்கும் குறைந்த வருமானத்தில் வீட்டுக்கு கூட கொடுக்காமல் சினிமா பார்த்தே ஆத்ம திருப்தி அடைவான் ரமேஷ்!
பேன் காற்றில் அந்த லாட்டரி டிக்கெட் பறந்து கீழே விழுந்ததை கவனிக்க தவறவில்லை ரமேஷ்! சேது மாமி காதில் விழும்படி “ஜெயா லாட்டரி டிக்கெட் கீழே விழுந்து கிடக்குது அத எடுத்து வை” என்று உரக்க கூறினான்!
ஜெயாவும் அதை அதை அப்படியே எடுத்து வைத்துவிட்டு தண்ணி பிடிக்க சென்று விட்டாள்!
ரமேஷ் அந்த டிக்கெட்டை மெதுவாக தன் சட்டைப்பைக்குள் வைத்துகொண்டு வெளியே சென்றுவிட்டான்....மறுநாள் லாட்டரி குலுக்கள் அதை தெரிந்து கொண்டுதான் அவன் அதை எடுத்து போனதே! மறுநாள் குலுக்களில் அந்த டிக்கெட்டுக்கு ஆயிரம் ருபாய் அடித்திருந்தது.....
சாமி படத்தின் கீழிருந்த டிக்கெட்டை காணமல் போனதால் சேது மாமிக்கு மனசு படக்.....படக்... என்று அடித்தது...எங்கே செல்லம்மா தவறாக நினைத்து விடுவாளோ என்று............
காரணம் செல்லம்மா தான் டிக்கெட்டுக்கு ஆயிரம் ரூபா விழுந்திருக்கு என்று அவள் எழுதி வைத்த நம்பரை தினத்தந்தியில் பார்த்து சேது மாமிக்கே சொன்னது !!!
சேது மாமி உடனே செல்லம்மாவிடம் லாட்டரி டிக்கெட் தொலைந்த விவரத்தை சொன்னாள்.....செல்லம்மாவிற்கு தூக்கி வாரி போட்டது....
சேது மாமியோ .....இந்த பரிசு விழுந்த டிக்கெட்டை எடுத்தது ஜெயாதான்...நோக்கு தெரியுமனோ செல்லு, அன்னிக்கு ரமேஷ் கீழே விழுந்த டிக்கெட்டை எடுத்து வைன்னு ஜெயகிட்டே சொன்னத நானும் கேட்டேன்டீ.... அவதான் எடுத்த வச்சிருக்கன்னு உறுதியுடன் சொன்னாள் சேது! செல்லம்மாவும் அதை நம்பி இருவரும் சேர்ந்து வசைமாரி பொழிந்தார்கள்!
எங்கடீ கொண்டுபோன அந்த டிக்கெட்ட ..தோ பாருடி...வந்தா டிக்கெடோடு வா இல்லேன்னா வேலைக்கு வராதே ..இவளெல்லாம் போலிசுக்கு புடிச்சு குடுக்கணம் மாமின்னு செல்லம்மாவும் கடிந்துவிட்டு போனாள்!!
கண்ணீருடன் வீடு திரும்பி கொண்டிருந்தாள் ஜெய!
ரமேஷ் வெளியிலே நம்பரை பார்த்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்து பணத்தையும் வசூல் செய்து, ஓட்டலில் நன்றாக சாப்பிட்டு, இரண்டு படமும் பார்த்து ..இரவு வேலை சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தான்!
சினிமா மோகத்தில் பாட்டும் பாடி கொண்டே ரமேஷ் எதிரில் வந்த ஆட்டோவை கவனிக்காமல் மோதிவிட்டான். ஒரு பக்கமாக ரத்த வெள்ளத்தில் ரமேஷ் மயங்கி கிடந்தான்...பக்கத்தில் இருந்தவர்கள் அவனை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு போய் சேர்த்தார்கள்!
ரமேஷ் வீட்டின் அருகாமையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தான் இந்த ஆடோவும் ஓடுகிறது...அதனால் அந்த ஓட்டுனருக்கு நன்றாக தெரியும் ரமேஷை ...அதனால் தான் விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவன் உதவியாக இருந்தான்...
ஆட்டோ ஓட்டுனர் மெதுவாக சேது மாமியுடன் விவரத்தை கொஞ்சம் பதட்டத்துடன் சொன்னான்....சேது மாமி உடனே ரமேஷின் அப்பாவிற்கு விவரம் தெரிவிக்க செல்லம்மா உட்பட அனைவரும் மருத்துவமனைக்கு படை எடுத்தார்கள்...
மருத்துவ மனையில் பலத்த காயங்களுடன் ரமேஷ் அவசர சிகிச்சை அறையில் படுத்திருந்தான்....அவனருகில் அனைவரும் அழுது கொண்டே இருந்தார்கள்.....அப்பொழுது ரமேஷ் கண்விழித்து அம்மா....அந்த டிக்கெட்டை ஜெய எடுக்கலம்மா நான் தான் எடுத்து செலவு செய்தேன்...என்னை மன்னிச்சுடும்மா ...அந்த வெங்கடசலபதி நேக்கு நன்னா தண்டனை கொடுதிட்டரம்மா.........என்று ஏங்கி ஏங்கி அழுதான்....அங்குள்ள அனைவரும் இறைவனை தொழுதவாறு கண்ணீர் விட்டார்கள்....பாவம் அந்த பெண்ணை தவறாக சொல்லி விட்டோமே என்று அனைவரும் ஜெயாவை நினைத்து கண்ணீரும் விட்டார்கள்...அந்த நேரத்தில் கதவு திறந்து மெதுவாக ஒரு உருவம் எட்டி பார்த்தது......ஆம்....அது ஜெயாதான் கை நிறைய பழவகைகளும் ஹார்லிக்ஸ் பாட்டில் சகஜம் அங்கு ரமேஷ பார்க்க கண்ணீர் விட்டபடி வந்தாள்.....அவளை பார்த்ததும் ஆசாரம் பார்க்கும் சேது மாமி ஓடி வந்து கட்டி பிடித்து ...அவள் கண்ணீரை துடைத்தாள்! “உன் கண்ணீர் எங்கள் கண்களை திறந்து விட்டதம்மா” என்று அவளை ஆற தழுவி....”திருப்பதி போய் திருப்தி அடைவதைவிட உன் கண்ணீரை துடைப்பதில் திருப்தி அடைந்தேன் ஜெயா”...என்று கூறி அவள் கண்ணீரை துடைத்தாள்...மௌனமே கலையாக ஒரு சிறு புன்முறுவலுடன் அந்த பழவகைகளை ரமேஷின் அருகாமையில் வைத்துவிட்டு வழக்கம் போல் சாவி வாங்கி வீட்டில் நிறைய வேலை இருக்கிறது நான் போகிறேன் மாமி என்று சொல்லி சேது மாமி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள் ஜெயா.......................!

மேலே உள்ள படத்தை வரைந்தவர் உன்னி கிருஷ்ணன்

எழுதியவர் : உன்னி கிருஷ்ணன் (30-Jul-13, 12:28 pm)
பார்வை : 217

மேலே