ஒரு கதை ஒரு குறள் ஒரு ஹைக்கூ (02)

ஒரு கதை
***************
அன்னம் - நம்ம பாட்டியின் வருட திதி வருது
நம்ம கோயில் புரோகிதர கூப்பிட்டு வருட திவசம்
செய்யவேணும் வீட்டை துப்பராக்குவம் வா ....

உன்னால் முடியாட்டி நமக்கு வேலைக்கு வரும்
மீனாட்சியை கூப்புடுவம் ..அதற்கும் வேலை கொடுத்தத்தாய் போகும் அதுவும் நாலு பிள்ளையோட
கஸ்ரப்படுது ..திவசம் அன்று மீனாச்சிக்கு ஒரு புடவையும் வாங்கி கொடுக்கணும் ...

இணையில் குறுக்கிட்ட அருள்வேலின் மனைவி
அன்னம் நல்லா சொன்னீங்கள் மீனாட்சிக்கு ஒரு சேலை வாங்கி கொடுக்கணும் எண்டு எப்பவோ யோசித்தான் சரியா சொன்னீங்க ..நல்லதருனத்தில் வாங்கி கொடுக்கிறோம் .....

ஒரு குறள்
***************
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை ...குறள் ;42

ஒரு ஹைக்கூ
*****************
இறந்தோர்
புரோகிதர்
நலிந்தோர் மதிப்பான்
நல் இல்லறத்தான்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-Jul-13, 12:33 pm)
பார்வை : 143

மேலே