இப்பொழுது சந்தோசமா உனக்கு...??? (Mano Red )
இப்பொழுது சந்தோசமா உனக்கு...???
எங்கேயோ பாதை தேடி
என் வழியில் நான் சென்றேன்,
விடாப்பிடியாய் உள் இழுத்து
காதல் முள் தைக்க
என் நெஞ்சை கிழித்தாயே...!!!
அநியாயத்திற்கு உன் மேல்,
அதிகாரம் செய்தது என் காதல்..!!
அடங்க மறுத்து எவ்விடமோ
அலை பாய்ந்து விட்டதே உன் காதல்..!!
பூப் போல வந்தாயே,
புதிதாகத் தெரிந்தாயே,
புத்திக்கு புரியும் முன்பே,
புயலாக மறைந்தாயே....!!!
நான் மிஞ்சும் போதெல்லாம்
காதலிக்க கெஞ்சிய நீ,
நான் கெஞ்சும் போது
காதல் மறுத்து மிஞ்சுகிறாயே..!!
உன் கொஞ்சல்களுக்கு மட்டுமே
அஞ்ச தெரிந்த என்னை
நஞ்சு புகுத்தி கொல்லாதே,
காதல் மறுத்து சொல்லாதே...!!
அச்சம் மடம் நாணம் துறந்த காதல்
உச்சம் தொடும் நேரம்,
துச்சமென என்னை நினைத்து
எச்சில் துப்பிய வார்த்தை கொண்டு
மிச்சமாக்கி போய் விட்டாயே..!!
உன் காதல் போதைக்கு
என்னை நொறுக்கு தீனியாக்கி
இதயம் நொறுக்கி விட்டாயே..!!!
இப்பொழுது சந்தோசமா உனக்கு...???