மழைக் காதலன்...!

வைரமுத்து கவிதையில சொல்ற மாதிரி...மழையை யாரிங்கு மழையாய்ப் பார்த்தது....வியாபாரிக்கு அது ஒரு சனியன், பள்ளிப் பிள்ளைகளுக்கு அது அன்றைய விடுமுறை...இப்டி அப்டி ஒவ்வொருத்தருக்கும் அது ஒரு மாதிரியான உணர்வினை அவுங்க, அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி கொடுக்குது. ஆனா மழையை யாரிங்கு மழையாய்ப் பார்த்ததுன்ற கேள்விக்குப் பின்னாடி ஆழமான வாழ்க்கை இருக்குறதா நான் நினைக்கிறேன்.

மழை வரும் போலிருக்கிறது...
கண்டிப்பாய்...
குடை கொண்டு போகக் கூடாது...!

மழையை ரசிக்கலாம், வாசலிலோ அல்லது ஜன்னலின் ஓரத்திலோ அமர்ந்து கொண்டு அடித்துக் கொண்டு தெருவில் ஓடும் மழை நீரோடு சேர்ந்தே நாமும் நகரலாம். வயதானாலும் கூட ஒரு சிறு கப்பல் செய்து விட்டுப்பார்க்கலாம், மழையை செல்லமாய் தடவிக் கொண்டே சாரலை முகத்தில் சிலீரென்று வாங்கிக் கொள்ளலாம், தாழ்வாரத்து நீரை கையேந்தி உள்ளங்கைக்குள் வாங்கி மகிழலாம், மழையோடு தொடர்பற்று ஒரு சிறு கம்பளிக்குள் கதகதப்பாய் நுழைந்து கொண்டு மழையோடு அன்னியப்பட்டு மழையை சுற்றி வளைத்து அனுபவிக்கலாம்....

சுற்றி இருக்கும் யாரைப்பற்றியும் கவலை இல்லாமல் கை விரித்து ஒரு காதலியாய் மழையைக் கட்டியணைத்து வரை முறை இல்லாமல் சில்மிஷங்கள் செய்யலாம்....

" என்ன ஒன்று இதை எல்லாம் செய்ய நாம் மழையை மழையாய்ப் பார்க்கவேண்டும்...."

எழுதியவர் : Dheva.S (30-Jul-13, 8:53 pm)
பார்வை : 98

மேலே