தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது - மண் மோகன் சிங்...! எவ்வாறு..என்று தெரியுமா..?

திருமயம் பெல் ஆலையை திறந்து வைத்து விட்டுத்தான் இவ்வாறு கூறினார் சிங் அவர்கள்...

நம் நாட்டில் முன்னேறிய மாநிலம்...பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது. 13 - வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நம் நாட்டில் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்தி தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே அணைத்து நாடுகளுக்கும் அணுஉலை அமைத்தல், தோரியம் எடுப்பதற்கு மலையை உடைத்து பொடிப்பொடியாக்குவது, நியுற்றினோ கூடம் அமைப்பதற்கு மிக மிக பழமையான மலையை உடைத்து இரண்டு இஞ்ச், மூன்று இஞ்ச் மெட்டல் ஆக ஆக்குவது...

கியாஸ் லைன் போடுவதற்கு விவசாய நிலங்களை அழித்து பெரிய பெரிய குழாய்களை போட்டு மூடுவது...காவிரி ஆற்றை திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் வரை மீத்தேன் எடுக்கிறோம் என்று சொல்லி மூடி விடுவது...( அதற்குள் அங்கு உள்ள மணலை எடுத்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டது திமுக மணல் க்ரூப்....ஆறே இருக்கப் போவதில்லை...பிறகு எதற்கு அங்குள்ள மணல் என்று கருதி இருப்பார்களோ....! )

அதேபோல கோடியக்கரை, நாகப்பட்டினம் என்று தொடங்கி ராமேஸ்வரம் தூத்துக்குடி வரை உள்ள மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் அடித்து துரத்துவது...அதுவும் மிக தந்திரமாக அயல் நாட்டு ராணுவத்தை வைத்து...

கூடங்குளம் அணு உலையை காரணம் காட்டி, அப்படியே கல்பாக்கம் வரை உள்ள கடற்கரையை கைப்பற்றி உலகம் முழுதும் உள்ள கார்ப்பரேட்
மீன்பிடி கம்பனிகளுக்கு விற்று விடுவது...

இவற்றையெல்லாம் கண்டித்தும் எதிர்த்தும் போராடும் தமிழர்களை மீனவர்களை அடித்து துவம்சம் செய்வதற்கு ஒரு மூன்று நான்கு ராணுவ பயிற்சி நிலையங்களை உருவாக்கி....அப்படியே தமிழ் நாட்டில் உள்ளவர்களை இடம் மாற்றம் செய்து விட்டு முழு தமிழகத்தையுமே பாதுகாக்கப்பட்ட கடல்பகுதி என்று அறிவித்து விடுவது...

இவற்றையெல்லாம் கேள்வி பட்டும் கண்டு உணர்ந்தும் பேசாமல் இருக்கும் தமிழ் நாடு....பிற மாநிலங்களை விட, மிக முன்னேறிய மாநிலம் என்ற பொருளில் கூறியிருப்பாரோ மண் மோகன் சிங் அவர்கள்..

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (2-Aug-13, 2:51 pm)
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே