ஆர்.டி.ஐ.....அரசியல் கட்சிகளுக்கு லேசான திருத்தமும் முழு விலக்கும் ....?.

கடந்த ஜூன் மாதம் மத்திய தகவல் ஆணையம் ஒரு உத்தரவை போட்டது...அதில் காங்கிரஸ் பாஜக, இடது வலது கம்யூனிஸ்ட்கள், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வருகின்றன என்று உத்தரவை போட்டது மேற்படி ஆணையம்...

இந்த ஆறு கட்சிகளுமே மறைமுகமாக மத்திய அரசின் நிதியை பயன்படுத்துகின்றன....எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்ட்டத்தில் கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் அளிக்க வசதியாக இந்தக் கட்சிகள் பொது தகவல் அதிகாரிகளை நியமித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தன...

கடந்த ஒன்றரை மாதமாக பூமிக்கும் வானத்துக்கும் குதித்தார்கள் இந்த மேற்படி ஆறு கட்சிகளும். அரசியல் கட்சிகளை ஆர்.டி .ஐ என்ற இந்த வலையத்திற்குள் கொண்டு வரக் கூடாது என்று..

மேலும் இவ்வாறு பதில் அறிக்கையும் வெளியிட்டது இந்தக் கட்சிகள்... அரசியல்
கட்சிகளிடம் இருந்து மற்ற தகவல்களை பெறுவது போன்று நிதி தொடர்பான விபரங்களையும் தேர்தல் ஆணையம் கேட்டுப் பெறுகிறது. எனவே நிதியை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அரசியல் கட்சிகள் விவாதம் செய்துள்ளன...

இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் துறையான பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, இது பற்றி சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியது. இதில் தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

இந்தச் சட்ட திருத்தம் மூலம் அரசியல் கட்சிகள் தங்களது நிதி குறித்த தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும், வேட்பாளர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற தகவலை அளிக்கவும் விதிவிலக்கை பெற்றனர் இந்த ஆறு அரசியல் கட்சிகளும்...

இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல் நாத் இவ்வாறு விளக்கம் அளித்தார்...பெரும்பாலான கட்சிகளின் விருப்பபடியே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

ஆக, இந்த ஆறு கட்சிகளும் இவர்களுக்கு கீழ் மாநிலக் கட்சிகளும் சேர்ந்து ஊழலை ஒழிக்கப்போவதுமில்லை....அணைத்து திட்டங்களுக்கும் கமிசன் வாங்காமல் இருக்கப் போவதுமில்லை...

அண்ணா ஹசாரே போராட்டத்தில் நாடே கலந்து கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று போராடிய போது இதே கட்சிகள் தான் கூறினார்கள் ஒரே குரலில்.,.....வேண்டுமென்றால் நீங்கள் பாராளுமன்றம் வாருங்கள்,,,சட்டம் கொண்டு வாருங்கள் என்றார்கள்...

பாராளுமன்றம் தான் இறுதியானது...மக்கள் எங்களை தேர்ந்து எடுத்துள்ளார்கள்...எனவே நாங்கள் சொல்வது தான் என்று சொன்னார்கள்...
சொல்கிறார்கள்....

அப்படியென்றால் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், பெருவாரியான மக்களின் நலன் பேணி காக்க வேண்டுமென்றால்...இந்த ஆறு கட்சிகளையும் ஏனைய மாநிலக் கட்சிகளையும் ஒழித்தால் சரியாகிவிடும் என்று கருதலாமா...? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (2-Aug-13, 4:27 pm)
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே