ஈரானுக்கு கடும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது அமெரிக்க அரசு..! என்ன செய்யப் போகிறது ஈரான்...?

ஈரானுக்கு கடும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது அமெரிக்க அரசு..! என்ன செய்யப் போகிறது ஈரான்...?

அணு உலையை காரணம் காட்டி அமெரிக்க அரசு கடந்த ஐந்து வருடமாக பல பொருளாதார தடைகளை ஏற்படுத்தி வந்துள்ளன...சீனா, இந்தியா போன்ற நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவு குறைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தது...நினைவிருக்கலாம். மேலும் இது தொடர்பாக நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலும் ஒரு மசோதாவை இயற்றினார்கள்..

அமெரிக்க இனி ஈரானுக்கு சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகளில் ஒத்துழைப்பு அளிக்காததுடன் வரும் 2015 - ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக அளவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மசோதா நிறைவேற்றி உள்ளது.

வெறும் இருபது செனட்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்..அதாவது இவர்கள் மசோதாவின் படி...2015 - ஆம் ஆண்டுக்குள் ஈரான் நாடு தனது கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரி வாயுவை உலகின் எந்த மூலைக்கும் ஏற்றுமதி செய்ய விடாமல் முடக்குவது என்பதே இந்த மசோதாவின் திட்டம்...

அதாவது எது செய்தாலும் சட்டப்படி செய்கிறார்களாம்...இங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக வினர் செய்கிறார்களே அது போன்று....
எதைச் செய்தாலும் பாராளுமன்றத்தில் வைத்து செய்வோம்...என்கிறார்கள்...இவர்கள் யாரையும்.... இவர்களை மீறி பாராளுமன்றத்திற்கு செல்லாதவாறு வேறு பார்த்துக் கொள்வார்கள்...

ஆக, உலகம் முழுக்க கூடி கூடிப்பேசி, மக்கள் நலன் சார்ந்த அரசு என்ற ஒன்றே இருக்கக் கூடாது...உருவாகவும் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்களோ...? சரி மேட்டருக்கு வருவோம்...

2015 - ற்குள் ஈரான் என்ற நாட்டை சுத்தமாக முடக்கி எகிப்து, சிரியா போன்று உள்நாட்டு கலவரத்தை உருவாக்கி இப்பொழுதுள்ள அரசை அகற்றி விட்டு கர்சாய் மாதிரி ஒரு டுபாக்கூர் தலையாட்டியை கொண்டு வர வேண்டும் என்று ஒத்தக் காலில் நிற்கிறதா அமெரிக்க அரசு...? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (2-Aug-13, 5:00 pm)
பார்வை : 74

மேலே