கண்ணாடி பொம்மை

சுற்றி வரும் காலம் உன்னிடம் மட்டும் என்னை பொம்மையாகவே வைத்து வேடிக்கை பார்க்கிறது.

அதீத அன்பு கண்களை மறைத்து விடும் என்று சொல்வதும் உண்மைதான் போலும்!!... இன்று என்னையே உன்னிடம் இருந்து மறைத்து விட்டது...

மறைத்து வைத்த காலங்களால் காயங்கள் மட்டுமே விஞ்சி நின்றாலும், நீ தந்த காயங்கள் அதை விட கொடுமையானது...

இருந்தாலும் தாங்கி கொண்டு வலியை சுமந்து கொண்டு பொம்மையாக திரிகிறேன்!!

என்னை நீயே புரிந்துக் கொள்.. அன்பிருந்தால்!!

இறுதியாக ஒன்று மட்டும் சொல்லி கடந்து விடுகிறேன்

""உன் முன்பு கண்ணாடி பொம்மையாய் வாழ்வது உன்னை என்னில் பிரதிபலிக்கவே... கீறல்களை சுமந்து வாழ்வதற்காக அல்ல!!""

எழுதியவர் : மலர் (2-Aug-13, 6:33 pm)
Tanglish : kannadi pommai
பார்வை : 145

மேலே