காதல் கவிதை
பூ முகம் உன்னை
நான் காணும் போது
பூலோகம் கண்ணில்
தானாய் அடங்கி போகுது !
பெண் சுகம் கண்டு
அலைபவன் நானல்ல
இருந்தும் உன்மீது இன்று
மயங்கினேன் நான்மெல்ல !
இதை காதல் என்றுதான்
இதயம் எனக்குள் ஒலித்தது
உனை காணாத நொடிதான்
இதயம் மெல்ல வலித்தது !
பாலாஜி

