சிந்தையோ சிறகடிக்கும் விந்தையாய்
வரைந்திட்ட ஓவியமாய் ஒருகாட்சி
உரைத்திடும் செய்தி நமக்கெல்லாம் !
இரைந்திடும் அலைகளே அல்லாத
மனிதர்களே திரிந்திடாத சூழலில்
அமைதி நிலவும் அழகிய கடற்கரை !
இருக்கைகள் இருந்திட்டும் இல்லை
ஆங்கே அமர்ந்து ரசித்திட ஒருவரும் !
திரிந்திடும் அன்னப்பறவை ஒன்று
பிரிந்திட்ட ஜோடியை தேடிய சோர்வால்
சோகமுடன் தனியே நிழலில் நிற்கிறது !
மாலை நேரத்து மயக்கத்தில் நாமும்
இமைமூடி இருக்கையில் அமர்ந்தால்
உள்ளமோ துள்ளிடும் உலகே மறக்கும்
சிந்தையோ சிறகடிக்கும் விந்தையாய்
நீந்திடுவோம் நிச்சயம் கனவுக் கடலில் !
பழனி குமார்