காசு தேடி தூரம் போய்
உன்னை விட்டு தூரம் போனேன்
என் அன்னையை விட்டு வெகு தூரம் போனேன்
காசு பணம் தேடி
நானும் கண்காணா இடம் தேடி போனேன்
விடிய விடிய உழைத்தாலும்
ஒரு வேளை ருசியா சாப்பிட முடியல்ல
விடியல்கள் மாறிப்போனாலும்
வேலைக்கு மட்டும் இங்க குறைவில்ல
ஒத்தமாச குழைந்தையோட
நீயும் இருக்கையில
விசாவும் வந்து சேர்ந்ததே
குழைந்தைக்கு
ஒன்பது வயசு ஆனா பின்னும்
என் குழைந்தை முகம் காண எனக்கு கொடுத்துவைக்கலயே
இந்த ஒன்பது வருசத்தில
என்னை பெத்த தாயும் மண்போய் சேர்ந்திட்டா
மண் வாசம் வீசிய எங்க ஊரும்
மால மாடியாய் ஆயிடிச்சே
அடி என் பொஞ்சாதியே
என் பிள்ள அப்பா என்று கேட்கும் போது
நம்ம கல்யாண போட்டவ காட்டு
அது மட்டும் தானே
உனக்கு நான் அங்கு விட்டு வந்த என் ஞாபக சொத்து
தினம் இரவுகள் வருகையில்
உன் நினைவாய்தான் இருக்குது
தினம் என் தாயின் நினைவால
என் மனமும் குமுறுது
அடி பொஞ்சாதி இன்னும் கொஞ்ச காலம்தான்
நானும் வந்திடுவேன் உன்னை தேடித்தான்
அதுவரைக்கு கொஞ்சம் பொறுத்துக்கம்மா
என் குழைந்தையை கொஞ்சம் நல்லா பார்த்துக்கமா