நம்பிக்கை துரோகம்

நம் மீது பிறர் கொண்டுள்ள நம்பிக்கை ! –இதை
கடுகளவு மாற்றம் இல்லாமல் பார்த்துக்கணும்

முழுமையாக நம்மை நம்பி இருப்பவனை
முழு மனதோடு பாத்துக்கணும் முதலில் நினை

உன்னையே முழு மனதில் நம்பிக்கை கொண்டு
உறவாடும் அந்த மனதை நினைவில் கொள்ளு

நீ கூறிய வார்த்தையை வாக்காய் எண்ணி –அவன்
நிறைவோடு உனை தொடரும் நிலையை எண்ணு

காலங்கள் மாறும் இது இயற்கையின் விதி –
நம்பிக்கையின் உன் மீது கொண்டுள்ளவன் கதி

மனவருத்தம் மாற்றம் வந்துவிட்டால் –இன்னும்
முறையாக கலந்தது பேசி உன் முடிவை எடு

நீதான் என்று ஆழமான அவன் நினைப்பில் –இனி
துரோகம் மட்டும் செய்ய என்றும் எண்ணாதே

இது தவிர்த்து பணம் கொண்ட மமதையோடு –நீ
தவறு செய்ய நினைக்கும் மனதை விட்டு விடு

அறிவு இழந்து செய்யும் கேடு செயல் –நாளை
கெதி இழந்து நிற்கும் உன் வாழ்க்கை நிலை

வேண்டாம் நம்பிக்கை துரோகம் என்றும்
நல்லது செய் நம் வாழ்வு சிறந்து விளங்கும்

நம்பிக்கை இது காப்பாற்ற வேண்டியது !
துரோகம் இது செய்ய கூடாத ஓன்று !!

-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (4-Aug-13, 12:10 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 403

மேலே