நட்பு வாழ்த்து
துவண்ட நண்பனை
தூக்கி நிறுத்தும்
தூய பண்பு
துடிக்கும் இதயமான
தூய்மையான குணம் நண்பனிடத்தில் மட்டுமே...!!!
சோகங்களை சாதனையாக்கி
வேதனைகளை வெற்றியாக்கி
வேகங்களை விவேகமாக்கி
வேடிக்கைகளை வித்தியாசப்படுத்தும் குணம் நண்பனிடத்தில் மட்டுமே...!!!
இரண்டற பொழுது இரவாக கலந்து
உவண்ட அன்பு கொண்ட குணம்
நண்பனிடத்தில் மட்டுமே...!!!
தெரியாத விஷயங்களை தெளிவாக விளக்கி
தெளிந்த நீரோடை போல் ஆக்கும் குணம்
நண்பனிடத்தில் மட்டுமே...!!
விண்மீன்களின் அழகுபோல் வானத்தில் தோன்றி
விடியலை போன்ற கதிரவனின் குணம்
நண்பனிடத்தில் மட்டுமே...!!
பூக்கள் பூக்கும் தருணத்தில் தோன்றி
பூவிதழ் சிரிக்கும் புன்னகை குணம்
நண்பனிடத்தில் மட்டுமே...!!
ஏழ்மை என்று பாராது
எதிர்பார்க்காமல் இருந்து
ஏணி படியால் அவனை உயற்றி
ஏற்றத்துடன் பார்க்கும்
எளிய வடிவத்தில் ரசிக்கும் குணம்
நண்பனிடத்தில் மட்டுமே...!!
நன்றி மறவாத அன்பில்
நகரங்களில் வெவ்வேறு இடத்தில வாழ்ந்து
நாளும் இனித்திடும் நினைவுகளில் நனைந்து
நறுமண மலர் கொண்டு இந்த நட்பு திருநாளை
அலங்கரிப்போம்....!!!
என் அணைத்து தோழன் தோழிகளுக்கும் நண்பர்கள்
தின வாழ்த்துகள் .!!!
என்றும் மறவாத நட்பில்....////