உன் நினைவுகள் என்னுள்

தூர இருந்தாலும்
தூங்காமல் தினமும்
துளிர் விடும்
உன் நினைவுகள்
ஒவ்வொரு நிஸிகளிலும்
நீங்காமல் நினைந்து நினைந்து
உருக வைக்கும் ..
உடனே உன்னுடன் வந்து விட ஆசைதான்
ஆனால் வரமுடியாமல் நானும்
வராமல் நீயுமாய் இருக்கும் போது
வற்றாதா என் கற்பனைகள் யாவும்
வறண்டு போயின உன் கருவிழிக்குள்...