வேண்டாம் காதல்
காதல் சாத்திரம் பார்த்து வருவதன்று
கனத்தில் வரும் சாதல் போன்று
கண் இமைக்கும் நேரத்தில் குடியேறும்
காட்சி பொருளாய் உனை மாற்றும்!
உணர்வு கிளையின் நுனி பூவாய்
ஹார்மோன் காற்றில் அசைந்து ஆடுவாய்
நித்திரை நீக்கிவிட்டு நினைவினில் மிதப்பாய்
திரை தோன்றும் கதையாய் நீ ஆவாய்
தெளிந்த நீராய் அவள் ஊற்றெடுப்பாள்
உன்னை சாக்கடை ஆறாய் நாறவைக்கும்.
சக்தி வாய்ந்த பருவகாலத்தை
சறுக்கு பாறையாக்கி சிலை இழக்காதே!
சிலந்தி வலையில் சிக்கி கொண்டு
கிணற்று தவளையாய் வாழ் விழக்காதே!
சிந்தித்து பார் சிறகுகள் முளைக்கும்
விரிந்து பறந்து செல் உன் வானில்.
உயர்வு கண்டு உலகை காணு!!
- செஞ்சிக்கோட்டை மா.மணி