நினைவெல்லாம் நீயே!

நினைவெல்லாம் நீயே நிறைய
நான் என்னையே இழந்தேன்.
வழி தோறும் உன் முகம் தெரிய
வாழும் உலகையே மறந்தேன்.

இருவரும் ஒன்றாய் இணைந்து - ஈரடி
குறள் சொல்லும் வாழ்வை வாழ்வோமா?
துணையாக உன்னை நினைவில் கொண்டு
மனத்திரையில் வாழ்வை கண்டேனே!

கனவெல்லாம் நிஜம் இல்லை
கலைத்திட சொல்வது சரிதானா?
மேகம் கலைந்தால் நின்றுவிடும் மழைதானே
நீயும் வெறுத்தால் உதிர்ந்திடும் என் உயிர்தானே!

காற்று வீசினால் அசையாத பூ உள்ளதா?
நான் பேசினால் கேட்க மறுப்பது எனடி
இனிப்பின் இடம் எறும்புக்கு யாரும் சொல்வதில்லை
என் காதல் சேர நேரம் இன்னும் கூடவில்லையா?
விடைதெரியாமல் விடை பெற்றுவிட்டேன்
வினாக்களை எழுப்பி கவிதையை கேட்கிறேன்.
என் நிலை என்னவென்று எனக்கே தெரியவில்லை
நீ வந்தால் போதும் எல்லாம் மாறும்.....

- செஞ்சிக் கோட்டை மா.மணி

எழுதியவர் : - செஞ்சிக் கோட்டை மா.மணி (7-Aug-13, 11:51 am)
பார்வை : 67

மேலே