அடிமைதனம்... விடியல்...

விடியலுக்காக காத்திருக்கிறது கண்கள்... வேலியில் சிக்கி கொண்ட பிறகு!!

தூக்கம்,நிம்மதியை தொலைத்து விடியலுக்காய் காத்திருக்கிறது மனது.... பல நம்பிக்கைகளை கொண்டு!

கிழித்து செல்லும் முள்வேலி தரும் வலியும் மறந்து போனது... விடுவித்து கொள்ளும் முனைப்பில்!

ஆனால் இதுவரை தப்ப முடிவில்லை.

கண்மூடும் முன்பே கட்டப்பட்ட இந்த கல்லறையிலிருந்து வெளிவந்து சுதந்திர காற்றை ஒருமுறையாவது சுவாசித்து விட வேண்டும்!

தணியாத ஆசைகள் பல உண்டு... அதில் முதன்மையானது, இந்த அடிமைதனம் விலகிட வேண்டும் என்பதே!

எழுதியவர் : மலர் (8-Aug-13, 7:50 am)
சேர்த்தது : மலர்
பார்வை : 103

மேலே