சீர் குழைந்த சமுதாயமே

சீர் குழைந்த சமுதாயமே
சீர் குழைந்த சமுதாயமே
மக்களை அல்லல் படுத்தும் பெரும் காயமே,
விலை வாசி ஏற்றம்
எப்படி பணத்தை செலவழிக்க போகிறோம்,
என்ற மனிதனின் தடுமாற்றம்
மானிடர்களின் வறுமைத் தோற்றம்
இக்கொடுமை வாழ்வை
பார்க்க முடியாத கண்கள்
இல்லத்தின் அழுகையை
கேட்க இயலாத செவிகள்
பள்ளத்தில் விழும் வீட்டின் நிலமையை,
ஏற்று கொள்ள இயலாத இதயம்s
பிறகோ
எண்ணிக்கை இல்லாத மக்கள் தொகை
அதில் பல்வேறு ஜாதி வகை
கொலை, கற்பழிப்பு, கொள்ளை
இதற்கு எல்லையே இல்லை
வேரோடு சாய்ப்பதற்கு
அரசும் முன்வரவில்லை
என்ன செய்வது?
தேசத் தந்தையின் ஆசி பெற்று
சமுதாயத்தை சீர்திருத்துவோம்
என்று சிந்தை கொண்டு
சிரத்தையுடன் செயல் புரிந்து
இளைய சமுதாயத்தை இன்சமுதாயமாக
கரத்தில் ஏந்துவோம்

எழுதியவர் : சரத் kumar2 (8-Aug-13, 10:25 pm)
பார்வை : 100

மேலே