tamil
தமிழ்
தேவ அமுதினும் சிறப்புடைய தமிழே
நாவை ஆழுகின்ற உமிழ்நீர் கண்ட அறுஞ்சுவையே
நெஞ்சத்தில் ஆழமாக பதிந்து கிடந்த
தெந்தமிழே; இன்னிசையே;
துள்ளி விளையாடும் குழந்தைத் தமிழே,
பள்ளிக்குச் செல்லும் மாணவத் தமிழே,
வள்ளி கணவனின் முதற் றமிழே,
அள்ளி வீசும் கடலலை போல்
மனதில் உற்சாகத்துடன் துயில் எழுந்து,
கவிதை வடிக்கும் ஆற்றலைப் பெற்ற,
செந்தமிழே; என்னுயிரே;
பெற்ற தாய் அன்பு இல்லையேல்
நான் இவ்வுலகில் இல்லை
கற்ற தமிழ் தொண்டு இல்லையேல்
என் உயிர் இம்மண்ணில் இல்லை.