உன் நட்பு !!

முதல்முறை நீ உதிர்த்த வார்த்தைகளை கேட்டு திகைத்து நின்றேன்.. சில மணிதுளிகளுக்கு!

பதில் இன்றி உறைந்து நிற்க... அடுத்த கேள்வியை கேட்டு சுதாரிக்க செய்தாய்!

நலம் விசாரிப்புடன் முடிந்து போனது முதல் சந்திப்பு !

பார்க்கும் போதெல்லாம் புன்னகைக்கும் உன் முகம் கனவிலும் மறக்க முடியாத நிஜம்

அதிக உரிமை தந்தாலும் அளவோடு நின்று செயல்படும் உன் செயல்கள் உன் மீதான மதிப்பை அதிகமாக‌ உயர்த்தியது !

யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் என் ஒருவளுக்கு கிடைத்து.. உன் நட்பாக !

பிரச்சனை என்பதை அறிந்து நீயாக முன்வந்து தீர்த்து வைத்தவைகளை நிச்சயம் என்னால் மறக்க முடியாது!

காலங்கள் தொலைந்தாலும் தொலைக்க விரும்பவில்லை.. உன் நட்பினை!

இறுதி வரை தோள் கொடுத்து துணை நின்ற நீ, ஒரு நல்ல நட்பின் உதாரணம் தான்... என் வாழ்க்கையில்!

எழுதியவர் : மலர் (10-Aug-13, 11:44 am)
பார்வை : 505

மேலே