வா நண்பனே...

மழை பெய்யும் நேரத்தில்
மரக்கிளையில் ஒதுங்கிய
பறவைகள் போல

ஒரு நாள் நாம் இங்கே
ஒன்றாக கூடி சேர்ந்தோம்

ஆடினோம் பாடினோம்
அன்பின் அர்த்தம் நாம்
இங்கே நேடினோம்

மச்சா என்ற வார்த்தையிலே
ஒரு மகத்துவம் நாம் கண்டோம்

மணிக் கணக்கில் திட்டினாலும்
அதை நட்பின்
மரியாதை என்றெடுத்தோம்

ஐந்து ரூபாய் சாக்லேட் வாங்கி
ஐந்து பேர் பகிர்ந்து மகிழ்ந்தோம்

ஒரு கிலோ கேக் வாங்கி
ஒற்றைக்கு தின்றாலும்

அந்த ஒரு துளி சாக்லேட்டை
நக்கி தின்ற சந்தோசம் என்றும்
நம் நாக்கு மறக்குமா..?

கல்லூரி படிக்கட்டில்
கால் எட்டு வைக்கும் நேரமெல்லாம்
நம் கனவுகளை பகிர்ந்து மகிழ்ந்தோம்
கவலைகளை பேசி மறந்தோம்

வகுப்பறையில் செய்த குறும்புகளை
நினைத்து இன்றும் சிரித்தோம்

சுதந்திர பறவைகள் நமக்கு
சவால் விடும் எதிர்காலம் காத்திருக்கு

இருந்தாலும்...
இந்த பசுமையான நினைவுகளுடன்
அதை நாம் எதிர்கொள்வோம்
வா நண்பனே..

எழுதியவர் : சங்கை முத்து (11-Aug-13, 5:48 pm)
சேர்த்தது : Sangai Muthu
Tanglish : vaa nanbane
பார்வை : 50

மேலே