தொடுவானம்
இலக்கறியாப் பாதையிலே கால்கள் பாவும்
வழிநெடுக முட்கள் பாதங்களை நலம் வினவும்
சூரியன் எழும் பின் விழும்
இவன் பயணம் மட்டும் தொடரும்
இன்னதென்று அறியாமல்
இரவில் குழந்தை வீறிட்டு அழுது பின் ஓயும்
தெருவோர நாயொன்று குரைத்து அடங்கும்
முடிப்புதர் வளர்ந்து முகத்தில் அரிப்பெடுக்கும்
கண்கள் இருளும் நா வறளும்
மூச்சு சீரின்றி மேலும் கீழும் இறைத்து
வேகமாக இதயம் லப்டப் செய்யத் தொடங்கும்
கடைசி மூச்சு உள்புகுமோ
வெளிச்செல்லுமோ அறியா நிலையிலும்
வாய்மட்டும் அவள் பெயரை உச்சரிக்கும்
தொடுவானில் அவள் ....
வெகுதொலைவில் இவன் ? ..
வெ. நாதமணி
13/08/2013.