என் கிறுக்கி - 6

கிறுக்கி பிடிக்கும் னு சொன்ன மறுகணமே கிறுக்கன் பலமுறை நன்றி நன்றி என்று முனுமுனுத்தபடி முக்கு சந்திப் பிள்ளையாரை நோக்கி ஓடினான்... எத்தனை முறை வேண்டி இருப்பான் கிறுக்கி தன் காதலை ஏற்க வேண்டும் என்று... உனக்கு நாளைக்கு விடல் உண்டு என்றவாறே வீடு சென்றான் .. மறுநாள் வழக்கம் போல் பள்ளி செல்கிறான்.. அவனுக்கு முன்னரே கிறுக்கி வந்திருந்ததை அவளது "லேடி பேர்ட்" சைக்கிள் அவனுக்கு காட்டிக் கொடுத்தது.. அதை பார்த்தது பள்ளி வாசல் முதல் வகுப்பறை வாசல்வரை ஓடினான் அனால் உள்ளே செல்லும் போது கேசுவலாக செல்வது போல் மெதுவாக நடந்து சென்றான் ...
உள்ளே கிறுக்கி மட்டுமல்லாது வேறு சில மாணவர்களும் அமர்ந்திருந்தனர்.. அதனால் இருவராலும் கண்களால் மட்டுமே பேச முடிந்தது... கிறுக்கின் பார்வை அவனை சுட்டெரித்து நாளை நீ சீக்கிரம் வா என்றது இவனும் ஓகே என்பது போல கண்ணாலே பேசினான்...
முதல் பிரியடே டெஸ்ட் சொல்லி இருந்தார்கள் ... படிப்பில் சுமாரனா நமது கிறுக்கன் காதல் வெற்றியின் களிப்பினால் படிக்கவில்லை .. அட படிக்க மறந்துட்டான் .. அதான் உண்மை...
கேள்வித்தாளை கேள்வியை போர்டில் பார்த்த உடன் திரு திருவென முழித்தான் கிறுக்கி கவனித்துவிட்டாள்.. கிறுக்கனுக்கு வெள்ளை விடைத்தாள் முழுவதும் கிறுக்கியின் முகம் தான்... தானாகவே சிரித்துக்கொள்கிறான் நண்பர்களுக்கோ சந்தேகம் பயபுள்ள படிச்சிருப்பானோ னு....
வழக்கம் போல் வாத்தியார் முதல் பெஞ்ச் மாணவிகளிடம் பேப்பரை திருத்தச் சொல்ல .கிருக்கியோ கிறுக்கனின் பேப்பரை தேடி ஒன்னும் இல்லாத பேப்பரில் பாஸ் மார்க் போட்டுவிட்டாள்...
அன்று தப்பித்தான் கிறுக்கன் வாத்தியாரின் "அடியிலிருந்து" அதுவே அவர்களின் காதலுக்கு "அடித்தளமானது".... உணவு இடைவேளையில் மாணவர்கள் செல்வதற்காக இருவரும் காத்திருந்தனர்... ஒவ்வொன்றாய் களைந்து சென்றனர் இப்பொழுது இருவர் மட்டும் தான் வகுப்பறையில்... இருவரின் சாப்பாடுகளும் இரண்டறக் கலந்தன இருவரின் இதயங்கள் போல..
சாப்பாடை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் காதல் "ரசம்" சொட்ட சொட்ட ....
இன்னும் கிறுக்காக்குவாள்..