என் தேவதை என் அம்மா

என் தேவதை என் அம்மா
**************************************
என் தேவதை என் அம்மா
என் கண் தேடிடும் கண்ணம்மா
எந்த பெண்ணிலும் இவள் பெரிதம்மா
பொன்னான என் பொன்னம்மா
தனிபெருங்கருணை தாயே
தெய்வத்திலும் உயர்ந்தவள் நீயே
உன் முத்தம் போல
எதுவும் இனிப்பதில்லையே
கண் சிமிட்டி சிரிக்க வைப்பாய்
கையசைத்து மகிழ வைப்பாய்
அரவணைத்து இதம் தருவாய்
கதைகள் சொல்லி உறங்க வைப்பாய்
உன்னைப்போல
கடவுளும் இல்லை
உன் அன்பை போல
எங்கும் உணர்ந்ததுமில்லை
என்னை படைத்த
என் தெய்வமே
உன்னை பிரம்மம் என்றால்
அது தகுமே
எங்கு எதை தின்றாலும்
என்னை தேடிடும்
உன் நெஞ்சம்
நான் கவலை மறந்து
அசந்து தூங்க
என்றும் தேவை
உன் நெஞ்சம்
எனக்காக நீ வாழ்வாய்
உனக்காக நான் வாழ்வேன்
நமக்காக
இப்புவி வாழும்
வாழ்க என்றும் அது வாழ்த்தும்
என்னை சுற்றியே உன் உலகம்
உன்னை சுற்றியே இனி என் உலகம்
என் உலகம் என் உறவும்
என் கனவும் என் நினைவும்
யாவும் அம்மா நீதான்
என் தேவதை என் அம்மா ....
- அன்புடன் அன்னை தாசன் R.P.ஓம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.ஓம்