மாட்டவேண்டும் கைவிலங்கு !..........

வழக்கு
எத்தனையோ
வழக்கு
நம் நாட்டில்
அத்தனையும்
அவர் அவர் செய்யும்
தவறுக்கு
வழங்கும்
வழக்காவும்
வழக்கின்
விளக்கம்
தெரிந்தவர்க்கு
விலக்கு
வழக்கை பற்றியே
தெரியாதவர்க்கு
கைவிலங்கு
தவறு
செய்தவரெல்லாம்
தப்பிப்பதற்கு
ஒரு வழக்கு
தப்பு
செய்யாதவருக்கு
சந்தேகத்தின்பேரில்
ஒரு வழக்கு
வழக்குகளிலிருந்து
விலகுவதற்கு
பல வழக்காடி
விளக்குபெறவேண்டும்
வழக்கில்
இல்லைஎன்றால்
மாட்டவேண்டும்
கைவிலங்கு
என்றும் அன்புடன்