எங்கே போகிறது என் இந்திய தேசம்?

மதுக்கடையில் வரிசை
வரிசையை நம்பிய அரசு
மது அவனுக்குள்ளே
அவனோ வீதியிலே
பணம் படைத்தவன் வாகனத்திலே
உயிர் ஆகாயத்திலே
அரசு சட்டம் போடுகிறது
அரசியல் திறந்து வைக்கிறது
பள்ளி மாணவர்கள்
தண்ணீர் சுமந்த காலம் மாறியது
மது சுமக்கும் காலமிது
எங்கே போகிறது
என் இந்திய தேசம்?